J.A. George / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாரிய வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கும் இலங்கை அணி, டி20 தொடரின் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று உள்ளூர் நேரப்படி இரவு 07.00 மணிக்கு எதிர்கொள்கிறது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம், சில டிக்கெட்டுகள் கிடைக்கும் என அறிவித்ததையடுத்து, போட்டியை பார்வையிட டிக்கெட்டுகளை வாங்குவதற்காக தம்புள்ளை மைதானத்தில் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்கின்றனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் இன்று அதிகாலை 03.00 மணி முதலே வரிசையில் நின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026