2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

ஈக்குவடோரிடம் தோற்ற உருகுவே

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் தென்னமரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன தகுதிகாண் போட்டிகளில், ஈக்குவடோரில் இன்று அதிகாலை நடைபெற்ற ஈக்குவடோருடனான போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் உருகுவே தோல்வியடைந்தது.

உருகுவே சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் லூயிஸ் சுவாரஸ் பெற்றார். ஈக்குவடோர் சார்பாக, மிஷெல் எஸ்ரடா இரண்டு கோல்களையும், மொய்ஸே கைசெடோ, கொன்ஸலோ பிளாட்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, சிலியில் நடைபெற்ற சிலிக்கும், கொலம்பியாவுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. சிலி சார்பாக, அர்துரோ விடால், அலெக்ஸிஸ் சந்தேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். கொலம்பியா சார்பாக, ஜெஃபெர்சன் லெர்மா, றடமெல் ஃபல்காவோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், பெருவில் நடைபெற்ற பிரேஸில், பெருவுக்கிடையிலான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வென்றது. பிரேஸில் சார்பாக, நெய்மர் மூன்று கோல்களையும், றிச்சல்ஸன் ஒரு கோலையும் பெற்றனர். பெரு சார்பாக, அன்ட்ரே கரில்லோ, றெனட்டோ தபியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, பொலிவியாவில் நடைபெற்ற ஆர்ஜென்டீனா, பொலிவியாவுக்கிடையேயான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனா வென்றது. ஆர்ஜென்டீனா சார்பாக, லொட்டரோ மார்ட்டின்ஸ், ஜோக்கின் கொரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், வெனிசுவேலாவில் நடைபெற்ற பராகுவேக்கும், வெனிசுவேலாவுக்கிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவே வென்றது. பராகுவே சார்பாகப் பெறப்பட்ட கோலை கஸ்டன் ஜிமென்ஸ் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .