2021 மே 14, வெள்ளிக்கிழமை

ஆர்ப்பாட்டத்தில் குதிக்கவுள்ள கிழக்கு மாகாண வைத்தியர்கள்

Princiya Dixci   / 2016 மார்ச் 24 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 02 மணி வரைக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியர்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடத்தவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் வைத்திய அதிகாரி கு. சுகுணன், இன்று வியாழக்கிழமை (24) தெரிவித்தார்.
 
இந்திய - இலங்கை வர்த்தக ஒப்பந்தம் எக்டா (ECTA) மற்றும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
 
அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார் 400 வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் உட்பட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக
அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .