2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

ஊழியரின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா

நிந்தவூரில் பெண் அரசாங்க ஊழியரொருவர் கடமையின்போது தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மட்டக்களப்பு, கல்லடியில் ஆர்ப்பாட்டமொன்று, இன்று (06) முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் ஒன்றியம்  இதனை ஏற்பாடு செய்திருந்தது.

மகளிர் ஒன்றியத்  தலைவியும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான செல்வி மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெருமளவிலான பெண்களும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் பங்கு கொண்டனர்.

நிந்தவூர் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியாற்றும் தவப்பிரியா என்ற பெண் ஊழியர், அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரால், இம்மாதம் முதலாம் திகதி தாக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .