ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 மே 28 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்தது.
ஏறாவூர் நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று நிவாரண சேகரிப்பில் தொண்டர்கள் ஈடுபட்டு வருவதாக மேற்படி சம்மேளனத்தின் செயற்பாட்டாளரும் சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.
ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துடன் ஜம்மிய்யத்துல் உலமாசபை. சிவில் அமைப்புகள் ஒன்றியம், தோழமைக்கழகம், விளையாட்டுக்கழகம், அல் ஹஷ்ஸால் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இணைந்துள்ளனர்.
இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நிவாரண சேகரிப்பு, 3 தினங்களுக்கு இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago