Kanagaraj / 2017 மே 20 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.எல்.ஜவ்பர்கான்,கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, ஆரையம்பதி உள்ள கோவில் ஒன்றில், கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டடம் சற்றுமுன்னர். இடிந்து விழுந்தது. அதில், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று மாலை 4.15 மணியளிவில் இடம்பெற்றுள்ளது.
ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாள் அமைந்து ஸ்ரீ முத்துமாரியம்மன கோவிலின் மண்டப கட்டடப்பணிகள் நிறைவடைந்து அதற்காக பிளேட் கொங்க்ரீட் இடும் பணிகளின் போதே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. கட்டடப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஆறுபேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைககு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அல்மேரா தெரிவித்தார்.
காயமடைந்த இன்னும் சிலர் கட்டட இடிபாடுகளுக்குள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் பணிகள் இடம்பெறுகின்றன என்று தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
8 hours ago
22 Oct 2025
22 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
22 Oct 2025
22 Oct 2025