2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. வாவியில் 13 வகையான மீனினங்கள் அழிவு

Suganthini Ratnam   / 2017 ஜூன் 01 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு வாவியில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதால், அவ்வாவியில் இதுவரையில் 13 வகையான மீனினங்கள் அழிந்துள்ளன கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கடற்றொழில் பரிசோதகர் ரி.பாலமுகுந்தன் தெரிவித்தார்.

ஓரா, ஒட்டி, தோலி, அதக்கை உட்பட 13 வகையான மீனினங்கள் அழிந்துள்ளன எனவும் அவர் கூறினார்.

தடைசெய்யப்பட்ட வலைகளான சிறிய கண்களைக் கொண்ட தங்கூஸ் வலை, முக்கூட்டுவலை உள்ளிட்ட வலைகளைப் பயன்படுத்தி மட்டக்களப்பு வாவியில் மீன் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதன் காரணமாக சிறிய மீனினங்கள் பிடிபட்டு அழிந்துள்ளன எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 12ஆயிரம் குடும்பங்கள்வொவி மீன்பிடித்தொழிலை நம்பி வாழ்வது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .