Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-த.தவக்குமார்
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்லிமடுவல் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக முறையில் அகழப்பட்ட மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இடங்களை நேற்று சனிக்கிழமை சுற்றி வளைத்து கைப்பற்றியுள்ளனர்.
நீண்ட நாட்களாக இப்பிரதேசங்களில் அனுமதிபத்திரம் இன்றி மணல் களஞ்சியப்படுத்தப்பட்டு வருதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பிரதேசத்தை சுற்றி வளைத்ததாக தெரிவித்தனர்.குறித்த பிரதேசங்களை அண்மித்துள்ள மூங்கிலாற்று பகுதியில் அகழப்பட்ட மணல் தனியார் காணியில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர் வருட் நாட்களில் மாரி மழை பெய்யத் தொடங்கியதும் கட்டுமான பணிகளுக்கான மணல் பெறுவதில் சிரமம் ஏற்படும் என்பதாலேயே அதிவிலைகளுக்கு இம்மணலை விற்பனை செய்யமுடியும் என்பதாலேயே மணல் களஞ்சியப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago