2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கடத்திவரப்பட்ட ரூ. 10 இலட்சம் பெறுமதியான பலகைகள் கைப்பற்றப்பட்டன

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜௌபர்கான், றிபாயாநூர்)

சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரப்பலகைகள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரம் உட்பட மரத் தளபாடங்களையும் காத்தான்குடி பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் மரங்களைக் கடத்தி வந்த டிப்பர் வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்தன தெரிவித்தார். இன்று காலை 1030 மணியளவில் காத்தான்குடி பிரதான வீதியால் குறித்த மரங்களை கடத்தி வந்த போதே அவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

முதிரை, தேக்கு மரப்பலகைகள், அம்மரங்களினால் தயாரிக்கப்பட்ட கதவுகள், கதிரைகள், மரம் அறுக்கும் இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளனதுடன் குறித்த வாகனமும் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .