2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கிழக்கு பல்கலைக்கழக முகாமில் வைத்து காணாமல்போன 174பேரின் நினைவு தினம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)
 
கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் தங்கியிருந்த நிலையில் கடந்த 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி காணாமல் போனவர்களின் 20ஆவது நினைவு தினம் அவர்களது உறவினர்களால் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. குறித்த தினத்தில் மாத்திரம் 158 பேர் காணாமல் போன அதேவேளை, அதே மாதம் 23ஆம் திகதி மேலும் 16 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக செங்கலடிப் பிரதேசத்தைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் அக்காலப்பகுதியில் தங்கியிருந்தனர்.
 
இந்நிலையிலேயே குறித்த தொகையினர் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை அறிய முடியாத நிலையே காணப்படுவதாகவும் அவர்களில் பலர் இன்னமும் உயிரோடு இருக்கலாம் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்களது உறவினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
 
இந்நிலையில், அன்றைய தினம் காணாமல் போனவர்களில் ஒருவரான 16 வயதுடைய தங்களது மகனின் புகைப்படத்துடன், அவர் திரும்பி வருவார் என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கும் பெற்றோரை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .