2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மானிய உரமூடைகளை களஞ்சியப்படுத்தியமை தொடர்பில் மூவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

ஏறாவூர்ப் பிரதேசத்தில் அரசமானிய உரமூடைகளை சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட லொறிச் சாரதி மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
சம்பவத்தின்போது குறித்த களஞ்சியத்திலிருந்து மஹிந்த சிந்தனைத் திட்டத்திற்குரிய 180 அரசமானிய உரமூடைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
 
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி வீ.இராமக்கமலன் முன்னிலையில் பொலிஸாரால் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
உர வியாபாரத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியிருப்பதால் அவர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார்  நீதிமன்றத்தில் ச்மர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .