2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

மட்டு. மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(றிபாயா நூர், சக்திவேல், எல்.தேவ்)

கிழக்கு மாகாண சபையின் விவசாய மீன்பிடி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு மீன்பிடி தோணிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன இன்று மாலை வழங்கி வைக்கப்பட்டன. மட்டு, களுதாவளை மகா வித்தியாலத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

 

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் துரையப்பா நவரத்தின ராஜா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன், கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன் உட்பட மீன்பிடி அமைச்சின் அதிகாரிகள், மீனவர்கள் இதில் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 90 மீனவர்களுக்கு 45 தோணிகளும் 600 வீச்சு வலைகளும் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .