2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

தற்காலிக கடைகளை அகற்றுமாறு வர்த்தக சங்கம் கோரிக்கை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்)

மட்டக்களப்பு, களுவாஞ்சிகிகுடி வர்த்தக சங்கத்தினருக்கும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பி;ன் போது களுவாஞ்சிகுடி நகரில் வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்கலிக கடைகளால் வியாபாரிகளுக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் அவற்றினை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பதிகாரியிடம் வர்த்தக சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாடசாலை, வைத்தியசாலை என்பன உள்ள பிரதான வீதியிலேயே இந்த நடைபாதைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவற்றினை மண்முனை தென் எருவில் பற்று - களுவாஞ்சிகுடி பிரதேச சபை தவிசாளருடன் கலந்துரையாடி விரைவில் அகற்றுவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு உறுதியளித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .