2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

வவுணதீவு விளையாட்டு மைதானத்துக்கு புதிய இடம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு- வவுணதீவு விமானநிலைய விஸ்தரிப்பின் காரணமாக உள்வாங்கப்பட்ட வவுணதீவு விளையாட்டு மைதானத்துக்கான புதிய இடம் பழைய இடத்துக்கு அருகாமையிலேயே வழங்கப்பட்டதுடன் விமான நிலையத்தினுள் இயங்கிவரும் வலையிறவு பாடசாலைக்கான புதிய இடமும் பார்வையிடப்பட்டது.

அண்மையில் மட்டக்களப்பு விமானநிலைய பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடிய மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரனுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினமும் விளையாட்டு மைதானத்துக்காக வழங்கப்படவுள்ள காணியினைச் சென்று பார்வையிட்டதுடன் களநிலை தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை விமானநிலைய பொறுப்பதிகாரி அலனுடன் இந்தப்பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடியதைத் தொடர்ந்து விளையாட்டு மைதானத்துக்கான காணியை வேறு ஓர் இடத்தில் வழங்குவது என முடிவு காணப்பட்டது.
இந்தச் சந்திப்பின்போது அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் ஜஸ்ரின், இணைப்புச்செயலாளர் பொன். ரவீந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விளையாட்டு மைதானத்துக்கான காணியைப் பார்வையிடுவதற்காக வருகைதந்த அமைச்சர், ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் பின்னர் காணிகளையும் பார்வையிட்டார்.

வவுணதீவு விமானநிலைய விஸ்தரிப்பு காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு ஏற்கனவே தீர்க்கப்பட்டாலும், விளையாட்டு மைதானம் மற்றும் பாடசாலை ஆகியவை பிரச்சினையாகவே இருந்து வந்தன. இந்தச்சிக்கல் குறித்து மாகாணசபை உறுப்பினர் துரைரத்தினம் நீண்டகாலமாகவே அதிகமான கூட்டங்களிலும் வெளிப்படுத்தி வந்திருந்தார்.

இந்தநிலையில் கடந்த வாரம் மட்டக்களப்பில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், மாகாணசபை உறுப்பினரால் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து அந்தப்பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் வாரத்தில் முடிவு எடுக்கலாம் என பிதி அமைச்சரால் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .