2021 ஜூலை 26, திங்கட்கிழமை

காசுக்கான வேலைதிட்டத்தில் பாடசாலை மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

Super User   / 2011 மார்ச் 26 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியை மீண்டும் கட்டியொழுப்பும் நோக்கில் மக்களை ஈடுபடுத்தி மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் காசுக்கான வேலைத்திட்டத்தில் பாடசாலை மாணவர்களை அரச சார்பற்ற நிறுவனங்கள் ஈடுபடுத்துவதாக சிறுவர் நல அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

குறிப்பாக வவுணதீவில் பிரதேசத்தில் 18 வயதுக்கு குறைந்த மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் வேலையில் ஈடுபடுத்தியதாக பிரதேச செயலாளருக்கும் நன்னடத்தை சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் வவுணதீவு சிறுவர் பிரிவிற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.

பன்சேனை பிரதேசத்தில் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் அரச சார்பற்ற நிறுவனம் மாணவர்களை ஈடுபடுத்தியதாக கிராம சேவை உத்தியோகஸ்தர் எழுத்து மூலம் கிறுவர் நன்னடத்தை பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .