Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா, ஆர்.அனுருத்தன்)
உதயம் - சுவிஸ் அமைப்பின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்வும் தற்காலிக கூடைப்பந்தாட்ட திடல் திறப்பு விழாவும் இன்று திங்கட்கிழமை வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய அதிபர் வீ.பஞ்சலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில்; பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.; கௌரவ அதிதிகளாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெளிநாட்டு ஆலோசகரும் உதயம் சுவிஸ் அமைப்பின் பொருளாளருமான கே.துரைநாயகம் மற்றும் கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் ரீ.உதய ஜீவதாஸ் கலந்துகொண்டு பாதணிகளை வழங்கி வைத்தனர்.
மட்டு. உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயம், மட்டு. பெரிய வட்டுவான் கண்ணகி வித்தியாலயம், மட்டு. சித்தான்டி சித்திவிநாயகர் வித்தியாலயம், மட்டு. சித்தாண்டி இராமகிருஷ்ண வித்தியாலயம், மட்டு. வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயம் ஆகியவற்றை சேர்ந்த 550 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டன.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago