2025 ஜூலை 12, சனிக்கிழமை

மகாத்மாகாந்தியின் 67ஆவது நினைவுதினம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 30 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா

மகாத்மாகாந்தி அடிகளாரின் 67ஆவது  நினைவுதினம் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி அடிகளாரின் நினைவுச்சிலைக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேந்திரன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரட்னம், எம்.நடராஜா, எஸ்.கிருஸ்னப்பிள்ளை, பிரசன்னா இந்திரகுமார், சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் சேவையின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ஏ.எல்.மீராசாகிபு  உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

இதன்போது, காந்தி அடிகளாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு,  இரண்டு நிமிடநேர மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .