2021 ஜூலை 31, சனிக்கிழமை

காத்தான்குடியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 23பேர் கைது

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

இம்மாதம் 13ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த 23 பேரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குணவர்த்தன தெரிவித்தார்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 21பேரும் லேகியம் விற்பனை செய்த ஒருவரும் அதேபோன்று அபின் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 23பேரில் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் இவர்களும் போதைவஸ்த்து விற்பனையில் ஈடுபட்டவர்களென காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .