Princiya Dixci / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
க-சரவணன்
அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் 16 வயதுச் சிறுவன், தனது 23 வயது சகோதரியை 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக இருவரையும் கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகள், சிறுவன் உட்பட 3 பிள்ளைகளையும் தாயாரையும் விட்டுவிட்டு தந்தையார் விலகிச் சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் தாயார் 3 பிள்ளைகளையும் வீட்டில் விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு வேலைவாய்பு பெற்றுச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில், குறித்த சிறுவனின் இரண்டாவது சகோதரி, கல்முனையில் வீடு ஒன்றில் வீட்டுவேலைக்குச் சென்று வருவதாகவும் தம்பியும் சகோதரியும் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ள நிலையில், சகோதரி வாந்தி எடுத்து நிலையில், கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இருவரையும் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்ததுடன், குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago