Niroshini / 2016 ஜூன் 11 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலைய கட்டடத்துக்கான அடிக்கல்லை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஹாபீஸ் நசீர் அகமட் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு திராய்மடுப்பகுதியில் நாட்டி வைத்தார்.
மாகாண அபிவிருத்தி விஷேட நிதியத்தின் 80 மில்லியன் ரூபாய் நிதியில் இந்தப்பயிற்சி நிலையக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே.முருகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டும் வைபவத்தில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம், கோவிந்தன் கருணாகரன், ஞா.கிருஸ்ணப்பின்ளை, எம்.நடராஜா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவி செயலாளர் ஏ.ஹுஸைன்தீன் உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர்கள், வைத்திய பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்துக்கு நிரந்தரக் கட்டடம் ஒன்று இல்லாத நிலையில், தற்காலிக கட்டடத்தில் இந்த பயிற்சி நிலையம் தற்போது இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago