Freelancer / 2025 ஜனவரி 04 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளை பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியால் பெண் பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்யும் நபர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறும் குறித்த விடயம் தொடர்பில் தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் 0672 260 222 எண்ணை தொடர்பு கொண்டு குறித்த நபர்கள் பற்றிய தகவலை அறிவிக்குமாறும் கேட்டுள்ளனர். R
15 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
1 hours ago