Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் அனுமதியின்றி அமைக்கப்படும் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென, சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.
இது குறித்து, சபையின் தவிசாளர் மேலும் கூறுகையில், சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டடங்கள் அமைப்பதாயின் பிரதேசசபையில் அனுமதி பெறப்பட வேண்டுமென்றும் இவ்வாறு அனுமதி பெற்றுச்செய்வதன் மூலம் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கும் பயன் உண்டு என்றும் கூறினார்.
இது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள போதும் சிலர் கட்டடங்களை அமைக்கின்றபோது, அனுமதி பெற்றுக்கொள்வதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு சபையின் எல்லையில், அனுமதியின்றிக் கட்டடங்கள் அமைக்கப்பட்டால் அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த அவர், அண்மையில் நடைபெற்ற சபைக் கூட்டத்தின் போதும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
38 minute ago
46 minute ago