Editorial / 2020 ஜூன் 29 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான் வா.கிருஸ்ணா, வ.சக்தி எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பில் வாவியும் கடலும் கலக்கும் கழிமுகமான முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ள மணல் திட்டுக்களை வெட்டி அகற்றுவதால் மட்டக்களப்பு வாவிக் கரையோரப் பிரதேசங்கள் எதிர்கொள்ள நேரிடும் பாதிப்புகள் குறித்து, அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பான விசேட அவசரக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கலாமதி பத்தமராஜா தலைமையில், மாவட்டசெயலகத்தில் நேற்று (28) நடைபெற்றது.
ஆற்றுவாயை வெட்டவிடுக்கப்படும் கோரிக்கையால் மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டன.
முகத்துவார கழிமுகம் தறிந்து விடப்பட்டால், ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய குடிநீர்ப் பிரச்சினை ஏற்படுமென, இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை, மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளும் மீனவர் சங்க பிரதிநிதிகளும் இங்கு கருத்து வெளியிடுகையில், ஆற்றுவாய் கழிமுகம் திறந்து விடப்பட்டால், மட்டக்களப்பு வாவியை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் 15 ஆயிரம் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் இழக்கப்பட சந்தர்ப்பம் உருவாகும் எனக் கூறினர்.
41 minute ago
44 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
44 minute ago
52 minute ago
2 hours ago