Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜனவரி 14 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் கொம்மாதுறை எனுமிடத்தில் நேற்று (13) மாலை இடம்பெற்ற விபத்தில் அம்பியூலன்ஸில் சிக்குண்டு வயோதிபரான பாதசாரி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளாரென, ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளி பிரதேச வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் ஒருவரைக் கொண்டு சென்ற அம்பியூலன்ஸில் மோதுண்டதில் கொம்மாதுறையைச் சேர்ந்த சமாதான நீதிவான் சின்னத்தம்பி சிவப்பிரகாசம் (வயது 63) என்பவரே பலியாகியுள்ளார்.
அம்பியூலன்ஸ் அதிவேகமாக வந்த சமயத்தில் பலியானவர் பாதசாரிக் கடவையில் குறுக்கிட்டதிலேயே, இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.
சடலம், உடற்கூறு பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .