Editorial / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், வடிவேல் சக்திவேல்
அரசியலில் எந்தத் தோல்வியும் நிரந்தரமானதல்ல எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்(அமல்), இப்போதல்ல, எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியில் சேரும் எண்ணம் தனக்கில்லை எனத் தெரிவித்தார்.
அத்துடன், இரு பக்கமும் தீர விசாரித்து, உண்மைத்தன்மையை அறிந்து, செய்தியை வெளியிடுமாறும் அவர், ஊடகவியளார்களிடம் கேட்டுக்கொண்டார்.
இன்றைய அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று (17) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஒருசிலர், தன்னிடம் நேரடியாகக் கருத்துக் கேட்காமல், தன்னை அவமானப்படுத்தும் நோக்கிலும் அவர்களைப் பிரபலபடுத்தும் நோக்கிலும் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றனர் எனக் குற்றஞ்சாட்டினார்.
இதை சில ஊடகங்களும் பொய்யாகச் செய்தி வெளியிடுவதாகவும் காலப்போக்கில் இத்தகைய வேலைகளைச் செய்யும் ஊடகங்களை, மக்களும் நிராகரிக்கும் நிலை ஏற்படுமெனவும் தெரிவித்தார்.
அத்துடன், தற்போதைய சூழலில் தான் எடுத்துக்கொண்ட பதவியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பதவி இல்லாவிட்டாலும் தான் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஜனாதிபதியுடன் தொடர்ந்து பேசுவதாகவும் அதில் எவ்வித மாற்றமும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.
அதற்காக ஜனாதிபதி இல்லாவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேரப்போறேன் என்ற கதை மிகக் கேவலமானது என்றும் அத்தகைய வேலையைக் கனவிலும் நினைத்துப் பார்க்கமாட்டேன் என்றும், அவர் மேலும் தெரிவித்தார்
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago