2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஆசிரியையின் தாக்குதலில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

Princiya Dixci   / 2016 ஜூன் 11 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடியில் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவன், பிரத்தியோக வகுப்பு நடத்திய ஆசிரியையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியிலுள்ள வித்தியாலயமொன்றில் கல்வி பயிலும் ஷாக்கிர் ரஹ்மான் (வயது 10) எனும் மாணவனே இவ்வாறு ஆசிரியையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் இன்று சனிக்கிழமை (11) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X