2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘ஆண்களின் கல்வி நிலை வீழ்ச்சி’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

“முஸ்லிம் சமூகத்தில் ஆண்களின் கல்வி நிலை வீழ்ச்சியடைந்து வருவது ஆபத்தானதாகும்” என, காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அபிவிருத்தி மன்றத்தால் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிலுள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்த வைபவத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது,

“பெண்கள் கல்வியில் முன்னேறி வரும் அதேவேளையில், ஆண்கள் கல்வியில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். இது சமூகத்தில் அனைத்து மட்டங்களிலும் தாக்கத்தை செலுத்தக் கூடும். காத்தான்குடியிலும் இந்த நிலைமையையே நாங்கள் காணக் கூடியதாக இருக்கின்றது.

“ஆண்களும் பெண்களும் சமமாக கல்வியில் முன்னேற்றத்தை காணும் போதுதான் சரியான ஒரு கல்வி அடைவு மட்டம் சம நிலை மட்டத்தை நாம் காண முடியும்.

“ஆண்களின் கல்வியை மேம்படுத்த சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X