Janu / 2024 பெப்ரவரி 22 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு , களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் புதன்கிழமை (21) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 84 வயதுடைய ஆறுமுகம் கிருஸ்ணபிள்ளை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
குறித்த கிராமத்தின் தாழ் நிலத்தை அண்டியுள்ள வீதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே களுவாஞ்சிகுடி பொலிஸார் இஸ்த்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .
மேலும் , குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வ.சக்தி
10 minute ago
16 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
18 minute ago