2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஆரம்ப பிரிவு மாணவர்களின் கண்காட்சி

வா.கிருஸ்ணா   / 2018 மார்ச் 07 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட்டக்களப்பு மெடிஸ்த மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கண்காட்சி, கல்லூரியின் அதிபர் ஜே.ஆர்.பி.விமல்ராஜ் தலைமையில், இன்று (07) நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.அருள்பிரகாசம், பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் பொறியியலாளர் வை.கோபிநாத், பாடசாலை பழைய மாணவர் சங்க தலைவர் எஸ்.சசிகரன், பாடசாலையின் உப அதிபர் ஆர்.பாஸ்கரன் உட்பட கல்வி வலய அதிகாரிகள், பெற்றோர் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் ஆக்கத்திறனை அதிகரிப்பதற்கும் அவர்களுக்குள் இருக்கும் திறமைகளுக்கான களத்தை ஏற்படுத்துவதற்கும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது.

நூற்றுக்கணக்கான மாணவர்கள், தங்களது கைவண்ணத்தில் உருவான பொருட்களை இங்கு காட்சிப்படுத்தியிருந்ததுடன், இதனை கண்டு மகிழ்வதற்கு மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் வருகைதந்தமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X