2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

ஆற்றுவாய் வெட்டும் முயற்சி; 33 பேருக்கு பொலிஸ் பிணை

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டும் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான ஸ்ரீ லங்கா பெரமுனை கட்சியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட 2ஆம் இலக்க வேட்பாளர் கீர்த்தி ஸ்ரீ விஜயசிங்க  உட்பட 33 பேர், பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேற்படி வேட்பாளர் தலைமையில், அம்பாறை மாவட்டத்திலிருந்து நேற்று (27) இரவு வந்த 33க்கு மேற்பட்டவர்களால்,  இந்த சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டிருந்ததாக, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் வருகைதந்த 3 வாகனங்கள், மண்வெட்டிகளை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்ணுற்ற அப்பகுதி  பொதுமக்கள், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவனின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து, பொலிஸார், இராணுவத்தின் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, பொதுமக்களின் உதவியுடன் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

சட்டவிரோத செயற்பாடு தொடர்பாக, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் மாநகர மேயர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

தற்போது குறிப்பிட்ட பகுதியில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இருவாரங்களுக்கு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மாவட்ட பிரிகேடியர் தனக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளதாக, மாநகர மேயர் தியாகராஜா  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X