2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஆவணப்பட செயலமர்வு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 03 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஆவணப்படம் மற்றும் குறும்படம் தயாரித்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சிப்பட்டறை நாளை சனிpக்கிழமை காலை 9 மணிக்கு  வொய்ஸ் ஒவ் மீடியா வலையமைப்பின் மட்டக்களப்பு ஊடகக் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய தமிழ் திரைத்துறையில் பணியாற்றுபவரும் இலங்கையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநருமாகிய எஸ்.சோமிதரன்  இந்த செயலமர்வில் பங்கேற்கவுள்ளார்.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இச் செயலமர்வில் ஆவணப்பட மற்றும் குறும்பட படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், திரைப்பட ஆர்வலர்கள் மாணவர்கள் ஆர்வமுள்ளவர்கள் எவரும் கலந்துகொள்ளலாம்.

கருத்துருவாக்கம், திரைக்கதை, தயாரிப்பு, ஆவணப்பட அறிமுகம் மற்றும் குறும்பட தயாரிப்பு போன்ற விடயங்களில் விளக்கமளிக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா மைதானத்துக்கு எதிரில் உள்ள வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக்கற்கைகள் நிறுவக மண்டபத்தில் இச்செயலமர்வு நடைபெறவுள்ளது.

பங்குபற்ற விரும்புபவர்கள் 065 222 2832, 0758265824 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தமது விவரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X