2025 மே 08, வியாழக்கிழமை

இரண்டு விருதுகளை தனதாக்கியது ஏறாவூர்ப் பற்று

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய வாசிப்பு மாத விருது வழங்கலில், ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபையால் நிருவகிக்கப்படும் நூலகங்கள், இரண்டு விருதுகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளனவென, நூலகர் தவராஜா சிவராணி தெரிவித்தார்.

இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டுள்ள செங்கலடி பொது நூலகம், ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு நூலகம் ஆகியவற்றுக்கே, ‪இவ்விரு விருதுகளும் கிடைக்கப்பெற்று, இன்று (23) கையளிக்கப்பட்டுள்ளன.

“வாசிப்பு மாதத்தில், வாசிப்புப் பழக்கம்” என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இவ்விரு நூலகங்களுக்கும் இந்த விருதுகள் கிடைக்கபெற்றுள்ளன.

கல்வி அமைச்சும், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையும் இணைந்து தேசிய வாசிப்புப் பழக்கம் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்ததோடு, இந்த விருதுகளையும் வழங்கியிருந்தன.

இந்நிகழ்வில், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் எச்.ஹேவகே, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையின் உப தவிசாளர் கே.ராமச்சந்திரன், செங்கலடி பொது நூலகத்தின் நூலகர் ரீ.சிவராணி உட்பட இன்னும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X