எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மார்ச் 08 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடியில் தாக்குதல் நடத்துவதற்காக பஸ்களில் ஆட்கள் வந்துள்ளதாகவும், அவ்வாறு வந்த பஸ்ஸொன்று, காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று (07) இரவு பரவிய வதந்தியை அடுத்து, காத்தான்குடியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனால் இரவு முழுக்க இந்தப் பதற்றம் காணப்பட்டது.
இந்த விடயம், காத்தான்குடி பொலிஸாருக்குத் தெரியப்படுத்தவே, இது ஒரு வதந்தி எனவும் இதை நம்ப வேண்டாம் எனவும் காத்தான்குடி பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்ததுடன், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபைக்கும் தெரியப்படுத்தினர்.
குறித்த பஸ், தினமும் காத்தான்குடியிலிருந்து வெளியூருக்குப் பிரயாணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்ஸாகும்.
இந்த பஸ்ஸை, பாதுகாப்புக் கருதி, வியாழக்கிழமை இரவு, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பஸ் சாரதி நிறுத்தியிருந்ததாகவும் பொலிஸார் தெளிவுபடுத்தினர்.
இதேவேளை, இந்தப் பதற்றமான சூழ்நிலையால் இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் காத்தான்குடி பிரதான வீதியில் இரவு முழுக்க நின்றிருந்தனர்.
காத்தான்குடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் காத்தான்குடி பிரதான வீதியில் பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், பொலிஸார் பாதுகாப்புக் கடமையிலும் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் வதந்திகளைப் பரப்பி மக்களை அச்சமடையச் செய்வோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
48 minute ago
56 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
56 minute ago
1 hours ago
6 hours ago