Princiya Dixci / 2016 ஜூன் 07 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு - இலுப்படிச்சேனைப் பகுதியில் எருமை மற்றும் காளை மாடுகள் உள்ளடங்களாக ஐந்து மாடுகளைச் சிறிய ரக வாகமொன்றில் ஏற்றிச்சென்ற நபரொருவரை, மிருகவதைக் குற்றச்சாட்டின் பேரில் இன்று செவ்வாய்கிழமை (07) கைதுசெய்துள்ளதாக கரடியனாறுப் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய வாகனம் ஒன்றில் மட்டக்களப்பு - மாவடிஓடை வயற்பிரதேசத்திலிருந்து ஏறாவூர் பிரதேசத்துக்கு இறைச்சி அறுப்பதற்காக குறித்த மாடுகள் கொண்டுசெல்லப்பட்டதாக கரடியனாறுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.ஆர்.பீ சேனநாயக்க தெரிவித்தார்.
குறித்த வாகனத்தில் மாடுகள் எழுந்து நிற்பதற்குக்கூட இடமின்றி அவஸ்தையுடன் காணப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
வாகனத்தைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், வாகனத்தின் சாரதியான சந்தேகநபரை, நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினர்.
20 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago