ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கோப்பாவெளி, 78ஆம் கட்டையைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் தீயில் கருகி மரணித்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு குழந்தைகளின் தாயான கிருஷ்ணப்பிள்ளை இராஜினி (வயது 30) என்பவரே, சனிக்கிழமை (17) இரவு, தீயில் கருகி, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவ தினம், இப்பெண், தனது வீட்டில் பகல் உணவு சமைத்துக் கொண்டிருந்துள்ளார்.
அதன் பின்னர் மாலையாகியும் வீட்டில் எதுவித நடமாட்டங்களும் இல்லாததால், அயலிலுள்ளவர்கள் மாலை 5 மணியளவில், பெண்ணின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, இளம்பெண் தீயில் கருகிய நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்துள்ளார்.
உடனடியாக, கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அப்பெண் மரணித்து விட்டாரென, பெண்ணின் உறவினர்கள், பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு, அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதால் வலிப்பு நோயைக் காரணம் காட்டி கணவன் பிரிந்து சென்று விட்டதாகவும் பெற்றோரின் தயவில் பெண் வாழ்ந்து வருவதாகவும் அப்பெண்ணின் இரு பிள்ளைகளும் உறவினர்களின் பராமரிப்பில் வாழ்ந்து வருவதாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம், உடற் கூறு பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம்பற்றி பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
9 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago