Princiya Dixci / 2021 பெப்ரவரி 17 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு டிப்போவில் பணிபுரியும் சாரதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, டிப்போவில் கடமை புரியும் 75 பேருக்கு, நேற்று (16) மாலைஅன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி டிப்போ சாரதி சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே, டிப்போவிலுள்ள சாரதிகள் மற்றும் ஊழியர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், சுகாதார வைத்தியதிகாரி எஸ்.கிரிசுதன் தலைமையிலான சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த அன்டிஜன் பரிசோதனையின்போது, வேறு எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago
1 hours ago