Freelancer / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 3 பொலிஸ் நிலையப் பிரிவுகளில் பல வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ள 2 கொள்ளையர்கள் சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளனர்.
இவ்விருவர் தொடர்பாக அடையாம் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு தெலைமையக பொலிஸ் நிலையத்துக்கே அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறு மட்டு தலைமைய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
காத்தான்குடி ,களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுகிலுள்ள பூட்டியிருந்த 4 வீடுகளை ஒக்டோபர் 29 ஆம் திகதி 9 மணித்தியாலயத்தில் உடைத்து அங்கிருந்து 28 பவுண் தங்க ஆபரணங்கள் 2 இலட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பணம் மடிகணினி, மணிக்கூடு போன்ற பெறுமதியான பொருட்கள் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

6 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Apr 2026