Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்காக, இணையத்தளத்திலும் பேஸ்புக்கிலும் வினா - விடை நிகழ்ச்சித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரின் ஏற்பாட்டில், இந்நிகழ்ச்சித் திட்டம், இன்று (19) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, https://edudept.ep.gov.lk/ என்னும் இணையத்தளத்திலும் Provincial-Department-of-Education-Eastern-Province என்னு பேஸ்புக் பக்கத்திலும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற மாணவர்கள் கற்க முடியும்.
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்ற இந்த வேளையில், வீட்டிலிருந்தவாறு கற்பதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, சகல மாணவர்களும் அதைப் பயிற்சி செய்து, கற்றலில் ஈடுபடுமாறு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் கேட்டுள்ளார்.
உயர்தரத்தின் விஞ்ஞான, கணித, வர்த்தக, கலைப் பிரிவுகள் உள்ளிட்ட சகல பாடங்களுக்கான வினா – விடைகளும் இதில் உள்ளடக்கப்படவுள்ளதாக, மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
18 minute ago
2 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
15 Aug 2025