Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 24 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
அக்கரைப்பற்று - இசங்காணிச்சீமை வயல் பிரதேசத்தில் கடந்த இரு தினங்களாக காட்டு யானையொன்று கால்வாய்க்குள் வீழ்ந்து உயிருக்கு போராடி வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை அதிகாலை வேளையில் இக்காட்டு யானை கால்வாய்க்குள் வீழ்ந்தாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த அக்கரைப்பற்று பொலிஸார் அம்பாறை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானைக்கு சிகிச்சையளித்தனர்.
அத்தோடு பெங்கோ இயந்திரத்தின் உதவியுடன் கால்வாய்க்குள் அகப்பட்ட யானையினை மீட்பதற்காக பல மணி நேரம் முயற்சித்தும் இக்காட்டு யானையினை கால்வாயினை விட்டு அப்புறப்படுத்த முடியவில்லை.
நீர் அருந்துவதற்காக வருகை தந்த வேளையில் இக்காட்டு யானை கால்வாய்க்குள் வீழ்ந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும், இக்காட்டு யானை வீழ்ந்த போது குறைந்தளவிலான நீரே காணப்பட்டது.
இருந்த போதிலும் தற்போது இக்கால்வாயின் மூலம் அதிகளவிலான நீர் ஓடிக் கொண்டிருப்பதாகவும் இதன்மூலம் யானையினால் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
33 minute ago
41 minute ago