Princiya Dixci / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காத்தான்குடி மற்றும் காத்தான்குடியை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 61 பேரினதும் விளக்கமறியல், நவம்பர் மாதம் 02ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காகச் சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் வழக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில், இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தச் சந்தேகநபர்கள், இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலிலுள்ள சந்தேகநபர்கள் மாத்திரமே மட்டக்களப்பு நீதிமன்றுக்கு நேற்று (19) அழைத்துவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
21 minute ago
27 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
27 minute ago
29 minute ago