2025 மே 19, திங்கட்கிழமை

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Editorial   / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கும்புறுமூலை வெம்பு காட்டுப்பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம், இன்று (21) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை கண்டெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த சடலத்தை அடையாளம் காட்ட பொதுமக்கள் முன்வரவேண்டுமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 45 – 50 வயதுக்குட்பவட்டவராக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X