2025 மே 08, வியாழக்கிழமை

உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு பயிற்சி

Gavitha   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹரண்

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அனுசரணையோடு,  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் முன்பள்ளி ஆசிரியைகளின் திறன்களை மேம்படுத்தும் நோக்கோடு நடத்தப்பட்ட உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு பயிற்சி நேற்று திங்கட்கிழமை (07) பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேசச் செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ரவீந்திரனால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி செயலமர்வுக்கு, ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலை ஆசிரியைகள், சுமார் 30 பேர் வருகை தந்திருந்தனர்.

இந்த பயிற்சிகள், மனப்பாங்கு மாற்றம், 3R கருதுகோள், 5S கருதுகோள் என்று 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முழுநாள் அமர்வாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வூட்டும் கையேடுகளும் பிரசுரங்களும் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு விநியோகிக்கப்பட்டதுடன், பயிற்சிகள் யாவும் மாலை வேளையில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுபாஜினி கோபிநாத்தின் நன்றியுரையோடு நிறைவுபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X