Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 01 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.மோகனதாஸ்
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வரும் சேனைப்பயிரச் செய்கையாளர்கள், விவசாயகளின் குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனைப்பற்று கிரான்குளம் பிரதேசத்தில், வெள்ளரிப்பழச் செய்கையில் ஈடுபட்டுள்ள
நூற்றுக்கணக்கான விவசாயிகள், வெள்ளரிப்பழ அறுவடையை உரிய காலத்தில் விற்பனை செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன்,
ஆயிரக்கணக்கான வெள்ளரிப்பழங்கள், அறுவடை செய்யப்படாமல் பழுதடைந்த நிலையிலும் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்குச்சட்டத்தால், தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த வியாபாரிகளால், வெள்ளரிப்பழங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தாம் பாரிய நட்டமடைந்துள்ளதாகவும் வெள்ளரிப்பழச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளரிப்பழம் மட்டுமல்லாது, வெண்டி, தக்காளி, கத்தரி போன்ற மரக்கறி வகைகளும் முற்றிய நிலையிலும், வாடிய நிலையிலும் காணப்படுவதாக, செய்கையாளர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago