2025 மே 14, புதன்கிழமை

எதிர்க்கட்சி தலைவராக சம்மந்தன் தெரிவானமை திருப்புமுனை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் எதிர்க்கட்சி தலைவராக தெரிவுசெய்யப்பட்டமை இலங்கை அரசியலில் புதியதோர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்மந்தனுக்கு கிடைத்துள்ள பதவி தொடர்பில் முஸ்லிம் சமூகம் முழுமனதுடன் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்கட்சித் தலைவராக கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்மந்தன் தெரிவுசெய்யப்பட்டமை நேற்று வியாழக்கிழமை கருத்து தெரிவித்த அவர், 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் புதிய நல்லாட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமையானது, நல்லாட்சியை  சிறப்பாகக் முன்னெடுத்துச்செல்ல வழிவகுக்கும்' என்றார்.

'1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டு சிறுபான்மையினத்தவர்களுக்கு பெருமை சேர்த்தார். அதேபோன்று 38 வருட காலத்துக்கு பின்னர்  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.' எனவும் அவர் தெரிவித்தார்.

'இனப்பிரச்சனை தீர்வில் சம்மந்தன் போன்றவர்களின் கருத்துக்களும் முஸ்லிம் தலைவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு நியாயமான தீர்வு கிடைக்குமென்றும் நம்புகிறேன்' எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X