Princiya Dixci / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர சபையின் விசேட அமர்வும் இரண்டாவது நிதியறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பும் நாளை (22) நடைபெறுமென, நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல்வாஸித் அறிவித்துள்ளார்.
ஏறாவூர் நகர சபையின் நிதியறிக்கை ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டு, அது தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில், மற்றுமொரு நிதியறிக்கையை சமர்ப்பிக்கப் போவதாக நகர சபைத் தலைவர் ஒக்டோபர் மாதம் அறிவித்திருந்தார்.
முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட நிதியறிக்கைக்கு மொத்தமுள்ள 17 அங்கத்தவர்களில் 12 பேர் எதிராகவும் 4 பேர் ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர். இதனால் நிதியறிக்கை தோல்வியடைந்திருந்தது.
அந்த வாக்கெடுப்பு முடிவடைந்து, கூட்டம் நிறைவுற்றதின் பின்னர், நிதியறிக்கை தோற்கடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சபை அங்கத்தவர்களிடையே சிறிது சலசலப்பும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago