2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஏறாவூர் நகர சபையில் அளவுக்கதிமான ஆளணி

Niroshini   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் நகர சபையில் அளவுக்கதிமான ஆளணி காணப்படுவதாக உள்ளூராட்சி நிருவாகத்தைப் பரிசீலிக்க முதலமைச்சரின் செயலாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் உள்ளகப் பரிசீலனை மேற்கொண்ட குழு  தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக ஏறாவூர் நகர சபையில் 142 பேர் நிரந்தரமாகவும் 27 பேர் தற்காலிக ஊழியர்களாகவும் 40 பேர் ஒப்பந்த அடிப்படையிலும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரங்கள் அடங்கிய தமது குழுவின் அறிக்கையை முதலமைச்சரின் செயலாளர் முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார்.

இது குறித்து அந்தக் குழு உள்ளகப் பரிசீலனை மேற்கொண்டு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

ஏறாவூர் நகர சபையில் மொத்தமாக 116 ஊழியர்களே அனுமதிக்கப்பட்டு ஆளணியினராக உள்ள நிலையில் அங்கு 105 பேர் மேலதிகமாக உள்ளார்கள்.

நிரந்தர ஊழியர்களாக 39 பேரும் தற்காலிகமாக 26 பேரும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களாக 40 பேரும் என மொத்தமாக 105 பேர் மேலதிக ஆளணியிராக உள்ளார்கள்.

இவர்களுக்கு மாதாந்தம் 5 மில்லியன் ரூபாய் உள்ளூராட்சி ஆணையாளரால் சம்பளமாக வழங்கப்படுகின்றது.

நகர சபையின் வருமானம் எந்தளவில் காணப்படுகின்றது என்பதைப் பொறுத்து தற்காலிக ஊழியர்களை நியமித்துக் கொள்ளுவது நல்லது.

மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் வரிப்பணத்தை கூடுதலாக மக்களது சேவைக்கே பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஊழியர்களை நியமிக்க அனுமதி கிடைத்து விட்டது என்றே ஒரே காரணத்துக்காக அதிகளவான ஊழியர்களை நியமனம் செய்வது என்பது பொருத்தமற்றது.

ஏறாவூர் வாசிகசாலையில் நூலக உதவியாளர்களாக 13 பேர் கடமையிலுள்ளார்கள். இது அளவுக்கதிகமான ஆளணி. இவர்களை வேறு சேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்பது பற்றி நகர சபைச் செயலாளர் சிந்திப்பது சிறந்தது.

அத்துடன் ஏறாவூர் நகரசபையில் 21 நாள் விடுகையை அனைவரும் 100 வீதம் பயன்படுத்துகின்றனர். 21 நாள் எங்களுக்கு விடுகைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற போதிலும் இது ஒரு சலுகையே தவிர வேறில்லை. இந்த விடுமுறைச் சலுகையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு போதும் அதிகாரிகள் தமக்குக் கீழுள்ளவர்களை ஊக்குவிக்கக் கூடாது. இது பற்றியும் நகரசபைச் செயலாளர் கவனம் செலுத்தி மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X