2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஏறாவூரில் விஷேட நிகழ்வுகள்

Niroshini   / 2016 ஜூன் 04 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
உலக சுற்றாடல் வாரம் மற்றும் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மாணவர் பாதுகாப்பு மாதத்தையொட்டி, ஏறாவூரில் இன்று சனிக்கிழமை விஷேட நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர்  மௌலானா பிரதமஅதிதியாகக் கலந்துகொண்டார்.
 
உயிரோட்டமாக கல்வி வள நிலையத்தின் தலைவர் ஐ.எல்.இஸட்.ஆப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர் நடைபவனி மற்றும் சித்திரப்போட்டி என்பன நடைபெற்றன.
 
பவனியில் கலந்துகொண்ட மாணவர்கள் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் மாணவர் பாதுகாப்பு தொடர்பான வாசகங்களைக் கொண்ட சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகம், ஏறாவூர் பொலிஸ், நகர சபை மற்றும் பிரதேச செயலகம் போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X