2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஏழு ஆடுகள் திருட்டுப் போயுள்ளதாக முறைப்பாடு

Princiya Dixci   / 2016 ஜூன் 07 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, ஒள்ளிக்குளம் பிரதேசத்தில் ஏழு ஆடுகள் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் ஆடுகளின் உரிமையாளரினால் இன்று செவ்வாய்க்கிழமை (07) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப்பிரசேதத்தில் ஆடுகள் மற்றும் மாடுகள், இனந்தெரியாதோரினால் அடிக்கடி கொள்ளையிடப்பட்டு வருவதாக  ஆடுகள் மற்றும் மாடுகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் விபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மூன்று மாதங்களில் 15,000 ரூபாய் தொடக்கம் 20,000 ரூபாய் வரையான பெறுமதியான 20 ஆடுகள் இப்பிரசேத்தில் காணாமல் போயுள்ளதாகவும் இது தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காத்தான்குடிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X