2025 மே 19, திங்கட்கிழமை

ஐ.தே.கவை பலமடையச் செய்ய வேண்டும்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியை பலமடையச் செய்ய வேண்டும்” என, அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் சசிதரன் கார்த்திக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையில் போட்டியிடுவற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுப்பத்திரத்தைத் தாக்கல் செய்ததன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.தே.க பலமிழந்து காணப்படுகின்றது. தற்போது கட்சிக்குப் புதிய இரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது.

“ஐக்கிய தேசியக் கட்சி இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்களை மதித்து அவர்களை ஒன்றினைத்துள்ள கட்சியாகும்.

“இந்தக் கட்சிக்கு நாம் இங்கு கொடுக்கும் ஆதரவுதான் எதிர்காலத்தில் நமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய உதவியாக அமையும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X