Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்துக்கு முன்பாக இன்று (25) ஒன்றுகூடிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களால், அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய, ஒருஇலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டத்தின் கீழ், நியமனம் வழங்கும் நிகழ்வு, தேவநாயகம் மண்டபத்தில் நேற்றுக்காலை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வுக்கு வந்த நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகளும் அவர்களின் உறவினர்களும் மண்டப நுழைவாயில் திறக்கப்படாத காரணத்தால் வீதியில் குழுமியிருந்தனர். தொடர்ந்தும் நியமனம்பெறவந்தவர்கள் அலைக்கழிக்கப்பட்டு, இறுதியாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் அலுவலகத்தில் நியனம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது குறிப்பிட்ட ஒரு தொகையினரே கட்டம்கட்டமாக அனுமதிக்கப்பட்டதுடன், ஏனையவர்கள் வீதிகளில் காத்திருக்கவேண்டிய நிலையேற்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்றுகூடுவது தடைசெய்யப்படுவதாக சுகாதார பிரிவினரால் அறிவிக்கப்பட்ட நிலையிலும் அதனைக் கருத்திற்கொள்ளாமல், பொறுப்பற்ற வகையில் செயற்படும் அதிகாரிகள் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago